Monday, January 29, 2007

சிப்பிக்குள் முத்து... !


பேருந்தில்... அருகில் நிற்கும்...
கர்ப்பிணிப் பெண்ணுக்கு…
எழுந்து இடம் தராமல்…
தூங்குவது போல் பாசாங்கு செய்யும் நீ…
என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்… ?
காதலையா… ?

Monday, January 22, 2007

மௌன ராகம்... !




சிகப்புப் பாவாடை வேண்டும்…
என்று சொல்ல நினைத்து…
அவசரத்திற்கு வேறு எதுவும் கிடைக்காமல்…
தன் விரலை அறுத்து,
ரத்தம் காட்டிச் சிரிக்கிறாள்…
பாவனை செய்யும் ஊமைச் சிறுமி…

Friday, January 19, 2007

பாதகாணிக்கை... !



இராமனைக் காட்டுக்கு அனுப்பிய…

கைகேயி, வில்லி என்றால்…

கல்லும், முள்ளும் குத்தட்டும் என்று…

கால் செருப்பை வாங்கி வந்த பரதன்… ???

Tuesday, January 2, 2007

கண்டேன் சீதையை…


அப்பனுக்கு அறுபதாயிரம் மனைவிகள்…
ஒரு சந்தேகமும் இல்லை…
மகனுக்கு...

ஒரே மனைவி…
ஆயிரம் சந்தேகங்கள்…