Thursday, December 28, 2006
Tuesday, December 26, 2006
சின்னஞ்சிறு கதைப் போட்டி – 1
தோழமைக்கு வணக்கம்… !
இரண்டு வார்த்தைகளில் இருந்து பத்து வார்த்தைகளுக்குள் உங்களால் ஒரு சிறுகதை சொல்ல முடியுமா ? தலைப்பு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவரே எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் களத்தில் இறங்குங்கள். உங்கள் படைப்புகளுக்கான Link-ஐ பின்னூட்டத்தில் இடுங்கள்.
கடைசித் தேதி : 07-01-2007 காலை 11 மணி IST வரை
பரிசு : ஆச்சர்யமான பரிசு நிச்சயம் உண்டு.
நடுவர்கள் : நீங்களும், நானும் மிகவும் மதிக்கும், விரும்பும் இருவர்.
Sample சின்னஞ்சிறு கதை (என்னுடையது அல்ல)
கதையின் தலைப்பு : 2100-ல் அப்பாவிடம் குழந்தை
கதை : தங்கச்சின்னா என்னப்பா ?
ரெடி… ஜூட்… இரண்டிலிருந்து பத்து வார்த்தகளுக்குள் கதை (வேறு எந்த விதிமுறையோ, கட்டுப்பாடோ இல்லை)
+ நேசத்துடன்… இரா. அரங்கன்…
Posted by Ranganathan. R at 11:20 PM 4 comments
Tuesday, December 19, 2006
இரயில் பயணங்களில்…
கொய்யா விற்கும் கிழவி,
கடலை விற்கும் சிறுவன்,
ரேஷன் கார்டு கவர் விற்கும் குருடன்,
பாட்டுப் பாடிப் பிச்சை எடுக்கும் பெண்,
ஓடு வந்து ஏறும் மாணவன்,
ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்,
அடிக்கடி பேண்ட் பையைத் தொட்டுக் கொள்ளும் தந்தை,
அசதியில் லேசாகத் தூங்கிப் போன தாய்,
பான் பராக் துப்பும் வியாபாரி,
கைதட்டிக் காசு கேட்கும் மூன்றாம் பாலினர்
இப்படி, யாரைப் பற்றியாவது
கவனித்துக் கவிதை எழுதலாம்
என்று நினைப்பதற்குள்…
இறங்க வேண்டிய இடம் வந்தே விடுகிறது…
Posted by Ranganathan. R at 10:18 PM 0 comments