இரயில் பயணங்களில்…
கொய்யா விற்கும் கிழவி,
கடலை விற்கும் சிறுவன்,
ரேஷன் கார்டு கவர் விற்கும் குருடன்,
பாட்டுப் பாடிப் பிச்சை எடுக்கும் பெண்,
ஓடு வந்து ஏறும் மாணவன்,
ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்,
அடிக்கடி பேண்ட் பையைத் தொட்டுக் கொள்ளும் தந்தை,
அசதியில் லேசாகத் தூங்கிப் போன தாய்,
பான் பராக் துப்பும் வியாபாரி,
கைதட்டிக் காசு கேட்கும் மூன்றாம் பாலினர்
இப்படி, யாரைப் பற்றியாவது
கவனித்துக் கவிதை எழுதலாம்
என்று நினைப்பதற்குள்…
இறங்க வேண்டிய இடம் வந்தே விடுகிறது…
No comments:
Post a Comment