Tuesday, December 26, 2006

சின்னஞ்சிறு கதைப் போட்டி – 1



தோழமைக்கு வணக்கம்… !

இரண்டு வார்த்தைகளில் இருந்து பத்து வார்த்தைகளுக்குள் உங்களால் ஒரு சிறுகதை சொல்ல முடியுமா ? தலைப்பு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவரே எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் களத்தில் இறங்குங்கள். உங்கள் படைப்புகளுக்கான Link-ஐ பின்னூட்டத்தில் இடுங்கள்.

கடைசித் தேதி : 07-01-2007 காலை 11 மணி IST வரை
பரிசு : ஆச்சர்யமான பரிசு நிச்சயம் உண்டு.
நடுவர்கள் : நீங்களும், நானும் மிகவும் மதிக்கும், விரும்பும் இருவர்.


Sample சின்னஞ்சிறு கதை (என்னுடையது அல்ல)

கதையின் தலைப்பு : 2100-ல் அப்பாவிடம் குழந்தை
கதை : தங்கச்சின்னா என்னப்பா ?

ரெடி… ஜூட்… இரண்டிலிருந்து பத்து வார்த்தகளுக்குள் கதை (வேறு எந்த விதிமுறையோ, கட்டுப்பாடோ இல்லை)


+ நேசத்துடன்… இரா. அரங்கன்…




4 comments:

ஷைலஜா said...

அரங்கரே! சின்னஞ்சிறுகதைப் போட்டிக்கான கதை தலைப்பு சரியாக விளங்கவில்லை.
ஷைலஜா

Ranganathan. R said...

வணக்கம் ஷைலஜா,

சின்னஞ்சிறுகதைப் போட்டிக்கான விதிமுறை ஒன்றே ஒன்றுதான்.

1. இரண்டில் இருந்து பத்து வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.

எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும், எத்தனை படைப்புகளும் அனுப்பலாம்.

நன்றி... !

mee-and-mine said...

Example story nuchnu irukku !!

Unknown said...

தலைப்பு : நவீன சிறை with சிக்கன் கைதிகளுக்கு !
கதை :அம்மா பசிக்குது..அப்பாவ கொன்னவன் எங்க இருக்கான் ?