Thursday, March 1, 2007

தேடினேன்… வந்தது…




கடற்கரை மணலில்…
நடந்து சென்று…
திரும்பிப் பார்த்தபோது…
என்...
காலடித் தடங்களைக் காணவில்லை…

Wednesday, February 21, 2007

வறுமையில் நிறம் சிவப்பு... !


புத்தகம் சுமக்கும் வயதில்…
செங்கல் சுமக்கும் சிறுவன்…
இளமையில் கல்… !

Sunday, February 11, 2007

நாளை… !


இன்றே சிரித்துவிடு…

நாளை…

நீயும் காதலிக்கலாம்… !

Thursday, February 1, 2007

நம் நாடு… !


“ரோஜா” படத்தில்…
தேசியக் கொடி எரிக்கப்படும்போது…
உடம்பால் அணைக்கும் அரவிந்தசாமியை…
தீவிரவாதிகள் அடிக்கும்போது…
பின்சீட்டில் இருந்து குரல் வந்தது…
“போடு… இன்னும் அட்றா அவனை… “


Monday, January 29, 2007

சிப்பிக்குள் முத்து... !


பேருந்தில்... அருகில் நிற்கும்...
கர்ப்பிணிப் பெண்ணுக்கு…
எழுந்து இடம் தராமல்…
தூங்குவது போல் பாசாங்கு செய்யும் நீ…
என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்… ?
காதலையா… ?

Monday, January 22, 2007

மௌன ராகம்... !




சிகப்புப் பாவாடை வேண்டும்…
என்று சொல்ல நினைத்து…
அவசரத்திற்கு வேறு எதுவும் கிடைக்காமல்…
தன் விரலை அறுத்து,
ரத்தம் காட்டிச் சிரிக்கிறாள்…
பாவனை செய்யும் ஊமைச் சிறுமி…

Friday, January 19, 2007

பாதகாணிக்கை... !



இராமனைக் காட்டுக்கு அனுப்பிய…

கைகேயி, வில்லி என்றால்…

கல்லும், முள்ளும் குத்தட்டும் என்று…

கால் செருப்பை வாங்கி வந்த பரதன்… ???

Tuesday, January 2, 2007

கண்டேன் சீதையை…


அப்பனுக்கு அறுபதாயிரம் மனைவிகள்…
ஒரு சந்தேகமும் இல்லை…
மகனுக்கு...

ஒரே மனைவி…
ஆயிரம் சந்தேகங்கள்…